2 இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்தது

2 இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்தது;

Update:2023-07-21 01:45 IST

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் பகல் நேரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. மேலும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சோலையாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 94 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 90 அடியாக இருந்தது. இதற்கிடையில் தொடர் மழை காரணமாக எம்.ஜி.ஆர். நகரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் கலைஞர் நகரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து நடைபாதை, படிக்கட்டு சேதம் அடைந்தது. இதனை நகராட்சி நிர்வாகத்தினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்