முடி திருத்துவோர் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-02 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள முடி திருத்தும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முயன்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தென்காசி மாவட்ட முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் தேரடி திடலில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுந்தர், மணிகண்டன், வேல்முருகன், மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், தாலுகா செயலாளர் அசோக்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உச்சிமாகாளி, மாவட்ட தலைவர் அயூப்கான், பொருளாளர் தர்மராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முருகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்