வாழைப்பழ குடோன் எரிந்து நாசம்

பழனியில், வாழைப்பழ குடோன் எரிந்து நாசமானது.

Update: 2023-07-10 16:33 GMT

பழனி கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 54). இவருக்கு பட்டத்து விநாயகர் கோவில் அருகே வாழைப்பழ குடோன் உள்ளது. இந்த குடோனின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டதாகும். நேற்று இரவு அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவியது. குடோன் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் அரை மணி போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோன் மற்றும் அங்கிருந்த தள்ளுவண்டிகள், பிளாஸ்டிக் பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்