மாடு குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது

ராமநாதபுரத்தில் மாடு குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்தது.

Update: 2023-08-22 18:40 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள பழங்குளம் குறத்தி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாயன். இவருடைய மகன் சரவணன் (வயது 39). ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு செல்வதற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கே வந்த மாடு ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து உருண்டது. இதில் ஆட்டோவிற்கு பலத்த சேதம் ஏற்பட்டதோடு சரவணன் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்திற்கு காரணமான மாட்டை முறையாக பராமரிக்காமல் சாலையில் சுற்றி திரிய விட்ட அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரவணன் ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோவில் மோதி பாதிக்கப்பட்ட மாடு வயிற்றில் கன்றுடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தது. இது குறித்த கால்நடைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாக மீட்க வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்