இரும்பு கடையில் புகுந்து பணத்தை திருடி சென்ற ஆசாமிகள்

இரும்பு கடையில் புகுந்து பணத்தை திருடி சென்ற ஆசாமிகள்

Update: 2022-11-14 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி-திண்டுக்கல் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரே இரும்பு கடை நடத்தி வருபவர் முகமது மைதீன். இவரது கடை பணியாளர் நேற்று கடையை திறந்த உள்ளே சென்றபோது அங்கு கல்லாப்பெட்டி அருகில் பொருட்கள் சிதறி கிடந்தன. கல்லாப்பெட்டி திறந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. நள்ளிரவு நேரத்தில் கடை பின்புறம் உள்ள செட்டில் தகரத்தை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பணத்தை திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமீப காலங்களாக சிங்கம்புணரி பகுதியில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதத்தில் 4 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. ஆனால் வீடுகள், கடைகளில் புகுந்து திருடும் நபர்கள் பற்றி இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. தொடர் திருட்டு சம்பவங்களால் சிங்கம்புணரி பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி கொள்ளையர்களை பிடித்து கைது செய்ய வேண்டும் எனவும், இரவு நேர ரோந்து பணியை மேலும் அதிகரிக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்