பெரிய வியாழனையொட்டி சாந்தோம் ஆலயத்தில் பாதங்களை கழுவிய மயிலை உயர் மறை மாவட்ட பேராயர்

பெரிய வியாழனையொட்டி சாந்தோம் ஆலயத்தில் மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் பாதங்களை கழுவி, துடைத்தார்.

Update: 2023-04-07 11:28 GMT

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் தனது 12 சீடர்களுடன் இரவு உணவு சாப்பிட்டார். அப்போது அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார்.

இதை எடுத்துரைக்கும் வகையில், கத்தோலிக்க ஆலயங்களில் பாதங்களை கழுவி துடைக்கும் நிகழ்வு 'பெரிய வியாழன்' தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில், மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி கலந்து கொண்டு, பாதங்களை கழுவி, துடைத்தார். அப்போது சாந்தோம் ஆலய பாதிரியார் எம்.அருள்ராஜூம் உடன் இருந்தார். இதேபோல், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம், பாரிமுனை அந்தோணியார் ஆலயம் உள்பட தேவாலயங்களில் இந்த நிகழ்வு நடந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடத்தப்பட்டது.

புனித வெள்ளியையொட்டி, சிலுவைப்பாதை நிகழ்வும், மும்மணி நேர தியான ஆராதனையும் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது. ஈஸ்டர் பண்டிகை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்