15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்து பின்னர் அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம் என மனுதாரர் சண்முகம் தரப்பு வாதம்
அதிமுக பொதுக்குழு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு விசாரணை தொடங்கியது.
சென்னை,
அதிமுக பொதுக்குழு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு விசாரணை தொடங்கியது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு விசாரணை தொடங்கியது.ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மனுதாரர் சண்முகம் தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதங்களை முன் வைத்தார். அதில்,
* உட்கட்சி விவகாரம் எனக்கூறி எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம்.
* பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை விட கூடுதல் தீர்மானங்கள் வரக்கூடுமே என்ற அச்சம் உள்ளது.
* இரட்டைத்தலைமை என்பது கட்சியின் அடிப்படை கட்டமைப்பு, ஆனால் ஒற்றைத்தலைமை கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் உள்ளது.
*பொதுக்குழுவில் என்ன நடக்கப்போகிறது என்பது உறுப்பினர்களுக்கு தெரிய வேண்டும்.
* கூடுதல் தீர்மானங்களை சேர்க்கக்கூடாது.
* 15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்து பின்னர் அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம்
*ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் சேர்க்க முடியாது.
* 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளேன். கூடுதல் தீர்மானங்களை சேர்க்கக்கூடாது.
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள்.