தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தஞ்சையில் வருகிற 4-ந்தேதி நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023, வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.