தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி

தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி

Update: 2022-06-22 14:05 GMT

திருப்பூர்,

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை திரும்பி பெற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இளைஞர் விரோத அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அதற்குள் வடக்கு போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

இதில் ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் பாதுகாப்பு இயக்கம், சமூக விடுதலை கட்சி உள்ளிட்ட பெரியாரிய, அத்பேத்கரிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை வடக்கு போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்