சங்கரன்கோவிலில் தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
சங்கரன்கோவிலில் தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயிலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சங்கரன்கோவில்:
நெல்லை-தாம்பரம், தாம்பரம்-நெல்லை சிறப்பு ெரயில்கள் (வண்டி எண் 06003/06004) சங்கரன்கோவிலில் நிற்காமல் சென்று வந்தது. அந்த ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த ரெயில் இரு மார்க்கத்தில் இருந்து வரும்போதும் சங்கரன்கோவிலில் நின்று செல்ல தெற்கு ரெயில்வே உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்த சிறப்பு ரெயில் நேற்று காலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்றது. அந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் தி.மு.க., ம.தி.மு.க. பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.