தச்சநல்லூர் மண்டல வார்டுக்குழு கூட்டம்

தச்சநல்லூர் மண்டல வார்டுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-17 19:37 GMT

நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தச்சநல்லூர் மண்டல வார்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் கந்தன், கிருஷ்ணவேணி மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், வருகிற வடகிழக்கு பருவமழை காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் பல்வேறு பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்