நெகமம்
நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அமணீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு நேற்று முன்தினம் இரவு தேய்பிறை பஞ்சமி ஹோமம் நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அமணீஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.