ஜவுளி வியாபாரி தற்கொலை
குடும்ப தகராறில், ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளிகுமார் (வயது 25). இவர் ஊர், ஊராக சென்று ரெடிமேடு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி கீர்த்தனா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முரளிகுமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் முரளிகுமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.