நெல்லை-திருச்செந்தூர் புதிய மின்பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

நெல்லை-திருச்செந்தூர் புதிய மின்பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

Update: 2022-12-19 19:02 GMT

நெல்லை,

நெல்லை - திருச்செந்தூருக்கு இடையிலான ரெயில் வழித்தடத்தை மின்பாதையாக மாற்ற மின்சார கம்பிகள் பொருத்தும் பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று இந்த மின்பாதை வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

பிற்பகல் 3.05 மணி அளவில் மின்சார என்ஜின் மூலம் சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து சோதனை ஓட்டமாக புறப்பட்டது. இந்த ரெயில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. சரியாக 4.05 மணிக்கு, அதாவது 1 மணி நேரத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

சோதனை ஓட்டத்தை தொடர்ந்து, இன்னும் 2 வாரத்தில் நெல்லை - திருச்செந்தூர் இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் ரெயில் இயக்கப்படும் என்று மதுரை ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்