திண்டுக்கல்லில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-30 16:23 GMT

திண்டுக்கல் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. திண்டுக்கல் வித்யாபார்த்தி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், 10-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்துகொண்டன. போட்டியை வித்யா பார்த்தி பள்ளி நிர்வாகி சரவணபொய்கை தொடங்கி வைத்தார். போட்டிகள் 6 ஓவர்கள் அடிப்படையில் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன.

இதில், திண்டுக்கல் பண்ணை மெட்ரிக் பள்ளி-கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பண்ணை மெட்ரிக் பள்ளி 6 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கோனூர் அரசு பள்ளி அணி 6 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. முதலிடம் பிடித்த பண்ணை மெட்ரிக் பள்ளி அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 3-வது இடம்பெற்ற வாசவி பள்ளி அணிகளுக்கு பரிசுகோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதனை வித்யாபார்த்தி பள்ளி கல்விக்குழும தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். மேலும், சிறந்த வீரராக கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல் தேர்வு செய்யப்பட்டார். இதில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் ராஜகோபால், செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் செந்தில்குமார், ஆசிரியர் சங்க செய்தி தொடர்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்