தென்காசி:
தென்காசி பஞ்சாயத்து யூனியன் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கனகராஜ் முத்து பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்க வாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குழந்தை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் அழகு சுந்தரம், வினோதி, செல்வவிநாயகம், கலாநிதி, மல்லிகா, சுப்புலெட்சுமி, பிரியா ஆகிய அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது.
தமிழக அரசின் இரு மொழி கொள்கைக்கு முரணாக மத்திய அரசு மூன்றாவது முறையாக இந்தியை தமிழகத்தில் திணிப்பதை எதிர்த்து தமிழக முதல்-அமைச்சரால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்த குழு முழுமையாக ஆதரவை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.
இவை உட்பட 30 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.