தென்காசி நகர இந்து முன்னணி முன்னாள் தலைவர் நினைவு தினம்

தென்காசி நகர இந்து முன்னணி முன்னாள் தலைவர் குமார் பாண்டியன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு எச்.ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2022-12-17 18:45 GMT

தென்காசி நகர இந்து முன்னணி முன்னாள் தலைவர் குமார் பாண்டியனின் 16-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தென்காசி மலையான் தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு, குமார் பாண்டியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் குமார் பாண்டியனின் சகோதரர்கள் சக்தி, ரவி மற்றும் பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு காசி விஸ்வநாதர் சுவாமி கோவில், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், மலையான் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்