அரூரில் ரூ.4 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2022-12-26 18:45 GMT

அரூர்:

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று முதல் பருத்தி ஏலம் தொடங்கியது. அரூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதன்படி 208-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.7,290 முதல் ரூ.8,166 வரை விற்பனை ஆனது. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

இதுகுறித்து செயலாளர் அறிவழகன் கூறுகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அரூரிலும், புதன்கிழமைகளில் பொம்மிடி பஸ் நிலையம் அருகேவும் பருத்தி ஏலம் நடைபெறும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்