திருச்செங்கோட்டில் ரூ.77 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.77 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,242 முதல் ரூ.8,399 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,242 முதல் ரூ.7,229 வரையிலும், பனங்காளி ரகம் குவிண்டால் ரூ.10,122 முதல் ரூ.13,022 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,900 மூட்டை மஞ்சள் ரூ.77 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.