திருச்செங்கோட்டில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் ஏலம்

Update: 2022-05-21 16:43 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,009 முதல் ரூ.8,789 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,699 முதல் ரூ.7,339 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,125 முதல் ரூ.17,000 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 2,200 மூட்டை மஞ்சள் ரூ.1 கோடிக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்