திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-01-19 17:28 GMT

திருப்பத்தூர் அருகே கல்நார்சம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் திருவிழாவில் வாலிபர் பலியான சம்பவத்தை தொடர்ந்து முற்றுகை, கல்விச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் நடைபெற இருந்த எருது விடும் திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த எருது விடும் விழாவும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அதிகாரிகள் கூறுகையில் கல்நார்சம்பட்டி சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக எருது விடும் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. விழா நடத்தும் கமிட்டியினரை அழைத்து மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து அவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு எவ்வாறு எருது விடும் திருவிழா நடத்தப்பட வேண்டும் என விதிமுறைகள் கூறப்பட்டு பின்னர் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்