பள்ளத்தில் பாய்ந்த டெம்போ மீட்பு
மார்த்தாண்டம் அருகே பள்ளத்தில் பாய்ந்த டெம்போ மீட்பு
குழித்துறை,
தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன், டெம்போ டிரைவர். சம்பவத்தன்று இவர் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பெரியபாறை பகுதியில் டெம்போவை ஓட்டி சென்றார். அப்போது டெம்போ திடீரென அவருடைய கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பார்த்திபன் காயமின்றி உயிர் தப்பினார். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு டெம்போ மீட்கப்பட்டது.