டெம்போவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கழிவு பொருட்களை ஏற்றி வந்த டெம்போவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சுகாதாரத்தை பேணிக்காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெங்கம்புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று டெம்போவை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து டெம்போ உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.