சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-04-05 19:15 GMT

நாகை மாவட்டம் சிக்கலில் உள்ள பிரசித்திப்பெற்ற சிங்காரவேலவர் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனாகிய சிங்காரவேலவரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்