வெற்றிவேல் முருகன் கோவிலில் தேரோட்டம்

சேலம் பெருமாம்பட்டி வலியன்காடு வெற்றிவேல் முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-04 20:04 GMT

இரும்பாலை

சேலம் சித்தர் கோவில் அருகே பெருமாம்பட்டி, வலியன்காடு பகுதியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு செம்மன்திட்டு, திருமலைகிரி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்