கோவில் பூசாரிக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

சங்கரன்கோவில் அருகே கோவில் பூசாரிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-04 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி அனந்தப்பன்.

சம்பவத்தன்று பாலமுருகன், அனந்தப்பன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனந்தப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலமுருகன் கையில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசில் பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனந்தப்பனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்