கோவில் குளம் நிரம்பி சாலையில் தண்ணீர் வெளியேறியது
திருவிடைமருதூா் அருகே கோவில் குளம் நிரம்பி சாலையில் தண்ணீர் வெளியேறியது .
திருவிடைமருதூர்;
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான மன்னார் சாமி கோவில் குளம் நேற்று பெய்த கன மழையில் நிரம்பியது. இதனால் சாலையில் தண்ணீர் பெருகியது. தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குளத்து நீர் 4 புறமும் வெளியேறும் நிலையில் திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் சுபாதிருநாவுக்கரசு, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் வக்கீல் எஸ். கே. குமரவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குளத்தை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் இது குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று மன்னார் சாமி கோவில் குளத்துக்கு உடனே வடிகால் வெட்ட ஏற்பாடு செய்யப்படும் என கூறினா்.