தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா நெக்குந்தியில் உள்ள மயில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 8½ ஏக்கர் பரப்பிலான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.
பின்னர் நிலத்தை அளவீடு செய்து அளவு கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கோவில் நிலம் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி குத்தகைக்கு எடுத்து கொண்டார். இதில் அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், ஆய்வாளர் தனுசூர்யா, ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.