குரும்பபட்டியில் கோவில் கும்பாபிஷேகம்
பழைய கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியில் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திண்டுக்கல்லை அடுத்த பழைய கன்னிவாடி அருகே உள்ள குரும்பபட்டியில் கிச்சாளம்மன், கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து இன்று காலையில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, அனைவரின் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.