கோவில் கும்பாபிஷேக விழா
பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டியில் பூர்ணகலா புஷ்கலா தேவி சமேத கடைமடை அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே உள்ள குருக்கள்பட்டியில் பூர்ணகலா புஷ்கலா தேவி சமேத கடைமடை அய்யனார் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு குற்றாலம் தீர்த்தம் எடுத்து வருதல், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.