பழனி அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம்

பழனி அடிவாரத்தில் உள்ள அழகுநாச்சியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-12-11 16:33 GMT

பழனி அடிவாரம் கிரிவீதியில் அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு இன்று வருடாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் கலசபூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக புண்ணியாக வாஜனம், விநாயகர் பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமார், முருகேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்