அகத்தியர் கோவில் குடமுழுக்கு

அகத்தியர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-06-08 18:45 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி பகுதியில் உள்ள அகத்தியர்கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் நடந்து வந்தன. இதையடுத்து கடந்த 4-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்த பின்னர், சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றினர். விழாவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், திருப்பணி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்