பகவத் விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம்

பகவத் விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2022-11-27 19:12 GMT

கும்பகோணம் மடத்தெருவில் உள்ளது ஸ்ரீ பகவத் விநாயகர் கோவில். பல 100 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் முதன்முறையாக சுக்ர பட்ச சதுர்த்தி மற்றும் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை காவிரி ஆறு பகவத் படித்துறையிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம், யாகங்கள் நடைபெற்றது. மாலையில் பகவத் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பகவத் விநாயகர் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்