5 ஆண்டுகள் பணிபுரியும் கோவில் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்
5 ஆண்டுகள் பணிபுரியும் கோவில் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அருப்புக்கோட்டை,
5 ஆண்டுகள் பணிபுரியும் கோவில் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
அருப்புக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சொக்கநாதர் சுவாமி கோவிலில் பணியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் உதவி ஆணையர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக உதவி ஆணையரிடம் வழங்கினர். 5 ஆண்டுகள் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.
பணி மாறுதல்
கோவில் பணியாளர்கள் விரும்பிய இடத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இதில் சொக்கநாதர் சுவாமி கோவில் செயல் அலுவலர் தேவி, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோவில் செயல் அலுவலர் ஜவகர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள், அருப்புக்கோட்டை சரக ஆய்வாளர் கண்ணன், ராஜபாளையம் சரக ஆய்வர் மணி பாரதி, பெரிய மாரியம்மன் ேகாவில் செயல் அலுவலர் சத்யநாராயணன், விருதுநகர் செயல் அலுவலர், ராஜபாளையம் நச்சாடை தவிர்த்தருளிய கோவில் செயல் அலுவலர் கலா ராணி, விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவில் செயலாளர் லட்சுமணன், திருத்தங்கல் செயல் அலுவலர் தேவி, சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் செயல் அலுவலர் சுபாஷினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.