திரவுபதி அம்மன் கோவில் விழா

ஒரப்பம் திரவுபதி அம்மன் கோவில் விழா நடந்தது.

Update: 2022-05-30 15:16 GMT

பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த, 1-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவு, தெருக்கூத்து நாடகம் நடந்தது. இதில், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், சுபத்திரை கல்யாணம், அர்ச்சுனன் தபசு நாடகம் உள்ளிட்ட நாடகங்கள் நடந்தன. இறுதி நாளான நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பின்னர் பக்தர்கள் துடைப்பத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு நடந்தது. தொடர்ந்து, திரவுபதி அம்மன் வீதி உலா எடுத்து சென்று கங்கையில் நீராடுதல், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒரப்பம், சின்னஒரப்பம், நாகனப்பள்ளி, சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்