தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவில் வசந்த உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வெட்டிவேர் பந்தல் அமைத்து வசந்த உற்சவ சேவை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.