தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழா-ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு வகையான பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.