சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

Update: 2022-11-05 18:45 GMT

சனி பிரதோஷத்தையொட்டி நாமக்கல், பரமத்திவேலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

புத்தூர் ஈஸ்வரன் கோவில்

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் அருகே உள்ள வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் நாமக்கல் தட்டார தெருவில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் கோவில், என்.புதுப்பட்டி சொர்ணாம்பிகை உடனமர் ஸ்ரீ குபேர ஈஸ்வரர் கோவில், புத்தூர் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தையொட்டி சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதன்படி பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரர் கோவில்களில் சிவபெருமான், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்