சின்னகரசப்பாளையம் கன்னிமார் கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சின்னகரசப்பாளையம் கன்னிமார் கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-08-21 14:03 GMT

மோகனூர்:

மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி ஊராட்சி சின்னகரசப்பாளையம் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ சப்த கன்னிமார், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா கடந்த 12-ந் தேதி முகூர்த்தகால் நட்டு முளைப்பாரி இட்டு தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு, புண்யாகம், பஞ்சகவ்யம், கணபதி ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். இதையடுத்து விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி அழைத்து வரப்பட்டு விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது.,

விழாவில் நேற்று காலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், 2-ம் கால யாக கேள்வி பூஜை யாகசாலையில் புனிதகலசங்கள் புறப்பட்டு ஸ்ரீ மகாகணபதி ஸ்ரீ சப்தகன்னிமார், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பண்ண சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், மாணவர் மன்றம், மற்றும் சின்னகரசப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்