பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரபத்திர சாமி கோவில் திருவிழாதலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Update: 2023-08-03 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிபட்டி அருகே மூக்காரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த குருமன்ஸ் இன மக்கள் ஆடிப்பெருக்கு நாளில் திருவிழா நடத்தி வீரபத்திர சாமிக்கு வேண்டுதல் வைத்து தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கையொட்டி தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூக்காரெட்டிப்பட்டி, மோளையானூர், ரேகடஅள்ளி, பாப்பிரெட்டிபட்டி, பையர்நத்தம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி வீரபத்திர சாமி பூங்கரத்தை தலையில் சுமந்தவாறு நடனமாடி பல்வேறு பூஜைகள் செய்து தங்களது தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

மேலும் பில்லி, சூனியம், ஏவல், தீராத நோய் தீரவும், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினைகள் தீரவும் நூதன முறையில் சாட்டையடி நடத்தி வீரபத்திர சாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்