தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூடலூர்
கூடலூர் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்), தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுசூழல் ஆராய்ச்சி மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தமிழ்நாடு ஆலோசனை குழு உறுப்பினர் ரமேஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார். தொடர்ந்து தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் தமிழக தலைவர் திருநாவுக்கரசு பேசும்போது, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதியின் படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நுகர்வோர் குறைதீர்க்க தனி பிரிவை செயல்படுத்தி 90 நாட்களில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். நுகர்வோர் விரும்பும் சேவையை முறையாக வழங்க வேண்டும். உரிய முறைப்படி பதிவு செய்து சிம் பெற வேண்டும். அடுத்தவர் பெயரில் பதிவு செய்ய கூடாது என்றார்.
இதில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆய்வாளர் அகிலன், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.