தேஜஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்

சென்னை-மதுரை தேஜஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஞானதிரவியம் எம்.பி.வலியுறுத்தினார்

Update: 2022-12-22 20:39 GMT

நாடாளுமன்றத்தில் நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் கோரிக்கைகள் குறித்து பேசும்போது கூறியதாவது:-

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை, ரெயில் நிலைய மறு வடிவமைப்பு திட்டத்தின் கீழ் இணைத்து முழுவதும் குளிரூட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும். நாகர்கோவில்-மும்பை ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை வழியாக புதுடெல்லிக்கு தினசரி ரெயில் இயக்க வேண்டும்.

சென்னையில் இருந்து மதுரைக்கு குறைந்த பயண நேரத்தில் அதிவேக ரெயிலாக தேஜஸ் ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது மதுரை முதல் நெல்லை வரை இருவழிப்பாதை பணிகள் முடிவு பெற்று வருகிறது. ஆகவே இந்த தேஜஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

நெல்லையில் இருந்து செங்கோட்டை, கொல்லம் வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கீழக்கடையம், பாவூர்சத்திரம் ஆகிய நிலையங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்ல வேண்டும்.

நெல்லை- நாகர்கோவில் இடையே உள்ள காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி, மேலப்பாளையம், செங்குளம் ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் முன்பு போல் நின்று செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதுதவிர நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்