தக்கலை அருகே பரபரப்பு காதலிக்காக நடுரோட்டில் கட்டிப் புரண்ட வாலிபர்கள்

தக்கலை அருகே காதலியை கைப்பிடிக்க கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2022-11-11 19:04 GMT

தக்கலை:

தக்கலை அருகே காதலியை கைப்பிடிக்க கட்டிப்புரண்டு சண்டையிட்ட வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காதலிக்காக சண்டை

தக்கலை அருகே உள்ள வேர்க்கிளம்பி-அழகியமண்டபம் சாலையில் காலை 8.30 மணிக்கு வாகனங்களிலும், நடந்தும் பொதுமக்கள் ெசன்று கொண்டிருந்தனர். அப்போது ேவர்க்கிளம்பியில் நடுரோட்டில் 2 வாலிபர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் ஒரு பெண் பரிதவித்தபடி நின்று கொண்டிருந்தார். இந்தநிலையில் மேலும் 2 பேர் வந்து சண்டை போட்டவர்களில் ஒருவரை மட்டும் குறி வைத்து நையபுடைத்தனர். அப்போது அந்த பகுதியில் வந்தவர்கள் வேடிக்கை பார்க்கத்தொடங்கினர். உடனே பெண் உள்பட 4 பேர் அங்கிருந்து சென்று விட்டனர்.

தாக்கப்பட்டதில் காயமடைந்த வாலிபர் மட்டும் சாலையில் கிடந்தார். உடனே அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதுதொடர்பான காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பெண்ணின் முன்னாள் காதலனும், தற்போதைய காதலனும் சேர்ந்து கட்டிப் புரண்டு சண்டை போட்டு கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் விவரம் வருமாறு:-

முதல் காதல்

திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர் வெல்டிங் வேலை ெசய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலை விஷயமாக சென்றார். அப்போது அந்த வீட்டில் உள்ள 19 வயதுடைய கல்லூரி மாணவி மீது காதல் ஏற்பட்டது. காதல் மயக்கத்தில் மாணவி கேட்ட பொருளையெல்லாம் அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

அதே சமயத்தில் கல்லூரி மாணவியின் பக்கத்து வீட்டை ேசர்ந்த ஒரு வாலிபரும் அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். தான் காதலிக்கும் மாணவி மற்றொருவரை நேசிக்கிறார்என்பதை அறிந்தும் அவர் காதல் வலையை வீசியபடி இருந்தார்.

பெண் கேட்டு சென்றனர்

இந்தநிலையில் மாணவியை தேடி அவரது காதலன் வந்த போது பக்கத்து வீட்டு வாலிபர் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளார். இதையடுத்து காதலன் மாணவியிடம் 'நீ அவனை காதலிக்கிறாயா?' என கேட்டுள்ளார். அதற்கு மாணவி, 'அவன்தான் என்னை காதலிப்பதாக கூறுகிறான். நான் அவனை காதலிக்கவில்லை. உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் உன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி என் பெற்றோரிடம் பெண் கேட்க சொல்' என கூறியுள்ளார்.

இதில் மகிழ்ச்சியடைந்த காதலன் பெற்றோரிடம் கூறியுள்ளார். மகன் கூறியதை கேட்டு பெற்றோரும் பெண் கேட்டு சென்றதாக தெரிகிறது. அதற்கு மாணவியின் பெற்றோர் 'படிப்பு முடிந்த பிறகு பார்க்கலாம்' என கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் செல்போன் மூலம் காதலை தொடர்ந்தனர்.

காதலனை கழற்றிவிட்டார்

இந்தநிலையில் பக்கத்து வீட்டு வாலிபர் தொடர்ந்து வீசிய காதல் வலையிலும் மாணவி சிக்கி கொண்டார். இதனால் பழைய காதல் கசந்து, பக்கத்து வீட்டு வாலிபரின் காதல் இனிக்க தொடங்கியது. அது தொடரவே, முதல் காதலனை மாணவி கழற்றி விட்டார்.

இதனை அறிந்த முதல் காதலன் அதிர்ச்சியடைந்தார்.எனினும் சமாதானப்படுத்திக் கொண்டு நான் வாங்கி கொடுத்த பொருட்களை கொடுத்து விடு என மாணவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் சரியென்று கூறினார்.

மோதல் சம்பவம்

இந்த நிலையில் நேற்று காலையில் முதல் காதலன் வேர்க்கிளம்பியில் நின்று கொண்டிருந்த போது கல்லூரி மாணவி பக்கத்து வீட்டு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். உடனே முதல் காதலன் தனது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் காதலியிடம் 'என்னை ஏமாற்றியதோடு நான் வாங்கி தந்த பொருட்களையும் தராமல் ஏன் இப்படி ஏமாற்றி திரிகிறாய்' என கேட்டார். இதற்கு காதலி பதில் எதுவும் கூறாமல் மவுனமாக நின்றார்.

அப்போது பக்கத்து வீட்டு வாலிபர் 'சிறிது தூரம் சென்றதும் உனது பொருட்களை தருகிறோம்' என்று கூறிவிட்டு, செல்போனில் தனது நண்பர்களை அழைத்துள்ளார். சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டு வாலிபரின் நண்பர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியின் கண்முன்பு முதல் காதலனை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்