மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடும் வாலிபர்கள்
குளச்சலில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் வாலிபர்கள் திருடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குளச்சல்:
குளச்சலில் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் வாலிபர்கள் திருடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீன்பிடி தொழிலாளி
குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் சுஜின் (வயது 27), மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் வெளியே செல்ல மோட்டார் சைக்கிளை இயக்கிய போது இயங்கவில்லை.
பெட்ரோல் தீர்ந்து விட்டதா? என பெட்ரோல் டேங்கை பார்த்தபோது அதன் டியூப் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே சுஜின் தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.
வீடியோ வைரல்
அப்போது வீட்டின் முன் உள்ள சாலை வழியாக வந்த 2 வாலிபர்கள் அங்கும் இங்கும் நோட்டமிட்டபடி பதுங்கி பதுங்கி மோட்டார் சைக்கிள் அருகே வந்து நிற்பதும், பெட்ரோல் டேங்க் டியூப்பை பிடுங்கி பெட்ரோலை பாட்டிலில் பிடித்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த கண்காணிப்பு பதிவு காட்சிகளை சுஜின் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.