மின்மோட்டார் திருடிய வாலிபர்கள் கைது

மின்மோட்டார் திருடிய வாலிபர்கள் கைது

Update: 2022-06-24 16:21 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த மின்மோட்டரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்மோட்டரை திருடிய கோவிலூர் கீழதெருவை சேர்ந்த நாகராஜன் மகன் பாலமுருகன் (வயது28), தில்லைவிளாகம் மேலக்காடு கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் பல இடங்களில் மின்மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்