பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் விஜி (வயது 20). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவியை அவர் தனது நண்பருடைய உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது பெற்றோர் மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.