சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-09-23 21:00 GMT

சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 24). இவர், அழகாபுரம் ஓடக்கரை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை கடந்த 2017-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சரவணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்