போக்சோ வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-10-11 19:43 GMT

போக்சோ வழக்கு

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 27). இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்கமுத்துவை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிங்கமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சிங்கமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்