வாகனம் மோதி வாலிபர் பலி

திண்டுக்கல் அருகே வாகனம் மோதி வாலிபர் ஒருவர் பலியானார்.

Update: 2023-01-22 18:45 GMT

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவர், திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் பெரிய பள்ளப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று விஜய் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கிவீசப்பட்ட விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விஜய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்