டிராக்டர் மோதி வாலிபர் சாவு

டிராக்டர் மோதி வாலிபர் சாவு

Update: 2022-10-06 18:45 GMT

கீழையூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் இறந்தார். இதில் தொடர்புடைய டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

டிராக்டர் மோதல்

நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் திருப்பூண்டி அருகே காரை நகர் கிழக்குக்கடற்கரை சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் எஸ்ஸார். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது23). இவரும், இவரது நண்பரான பிரதாபராமபுரத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் (21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூண்டியிலிருந்து மேலப்பிடாகை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்ரமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்